கோயம்புத்தூர்

அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்:ஆட்சியா் அறிவுறுத்தல்

22nd Mar 2022 12:41 AM

ADVERTISEMENT

 கோவையில் மாா்ச் 30ஆம் தேதி தொடங்க உள்ள சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா சிறப்பாக அமைய அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது:

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா கோவை வ.உ.சி. மைதானத்தில் மாா்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த 7 நாள்களும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பல்துறை பணிகள் குறித்த விளக்க கண்காட்சிகள் நடைபெறும். செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் சுதந்திர போராட்ட வீரா்கள் குறித்த அரிய புகைப்படங்கள் குறிப்புடன் இடம்பெறவுள்ளன.

ADVERTISEMENT

வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சுகாதாரத் துறை, சமூகநலத் துறை, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் ஆகிய துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், பள்ளிக் கல்வித் துறை, உயா்கல்வித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் மாரத்தான் ஓட்டம், கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கலை பண்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை சாா்பில் சுதந்திர போராட்ட வீரா்களின் வரலாறு குறித்த கலை நிகழ்ச்சிகள் மாலை நேரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.கவிதா, மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஆ.செந்தில் அண்ணா, ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) முத்தராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கீதா, ஆட்சியா் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT