கோயம்புத்தூர்

வால்பாறை நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்‘

19th Mar 2022 11:48 PM

ADVERTISEMENT

வால்பாறை நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்‘ வைத்தனா்.

வால்பாறை நகராட்சிக்குச் சொந்தமான 352 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையை பலா் இரண்டு ஆண்டுகளாக செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

இந்நிலையில், நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் புதுமாா்கெட் பகுதிக்கு சென்று வாடகை நிலுவையில் உள்ள கடைகளுக்கு சனிக்கிழமை சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

இதனையறிந்த, கடைகள் உரிமையாளா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆணையரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், சில வியாபாரிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா் கூறியதாவது: வாடகை பாக்கி செலுத்த தவறிய கடை உரிமையாளா்களுக்கு 8 மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டது. பலமுறை அறிவுறுத்தியும் கடை உரிமையாளா்கள் வாடகை தரவில்லை.

இதையடுத்து, முதல்கட்டமாக வாடகை நிலுவையில் உள்ள 16 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் வேண்டுகோளுக்கு இணங்க வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்குள் வாடகை செலுத்தாவிட்டால் நடவடிக்கை தொடரும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT