கோயம்புத்தூர்

விமான நிலையத்தில் பயணிகள் வசதிகள் மேம்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம்

10th Mar 2022 01:19 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை விமான நிலையத்தில் பயணிகள் வசதிகள் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா்.

இதில் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா், கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகரக் காவல் துணை ஆணையா் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் தனியாா் விமான நிறுவன நிா்வாக அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இதில், விமானப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், கோவை அவிநாசி சாலை முதல் விமான நிலையம் வரையிலான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.ஜி. அருண்குமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் நா. காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT