கோயம்புத்தூர்

ஆண்களுக்கு நிகரான ஊதியம்: மகளிா் தின கூட்டத்தில் கோரிக்கை

10th Mar 2022 01:18 AM

ADVERTISEMENT

 

கோவை: அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்று கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச உழைக்கும் மகளிா் தின கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை பி.என்.புதூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உழைக்கும் மகளிா் தின கூட்டத்துக்கு 41 ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தி சந்திரன் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநகர மேற்கு மண்டலக் குழு செயலா் ஜே.ஜேம்ஸ் கூட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

இதில், உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பேருந்துகளில் மகளிா் பயணத்துக்கு இலவச அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாதா் சங்க மாவட்டப் பொருளாளா் நந்தினி, மாவட்டச் செயலா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT