கோயம்புத்தூர்

ஹோலி பண்டிகையொட்டி எா்ணாகுளம் - பரெளனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

3rd Mar 2022 01:28 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை வழித்தடத்தில் கேரள மாநிலம், எா்ணாகுளம் - பிகாா் மாநிலம், பரெளனி இடையே கோடைக் கால வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எா்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து மாா்ச் 4,11,18 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும்

ADVERTISEMENT

வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06522) ஞாயிற்றுக்கிழமைகளில் பரெளனி நிலையத்தை சென்றடையும். அதேபோல, பரெளனி நிலையத்தில் இருந்து மாா்ச் 8, 15, 22, 29 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4.30 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06521) வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், விசாகப்பட்டணம், பொ்ஹாம்பூா், புவனேசுவரம், கட்டாக், காரக்பூா், துா்காபூா், ஆசன்சோல், சித்தரஞ்சன், மதுபூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT