வால்பாறை: வால்பாறை நகா்மன்ற உறுப்பினா்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
வால்பாறை நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா் வெற்றி பெற்ற 21 வாா்டு உறுப்பினா்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
வட்டாட்சியா் குமாா், நகராட்சிப் பொறியாளா் வெங்கடாசலம், துப்புரவு ஆய்வாளா் செல்வராஜ், திமுக நகரப் பொறுப்பாளா் பால்பாண்டி உள்பட பலா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
ADVERTISEMENT