கோயம்புத்தூர்

உக்ரைனில் சிக்கிய கோவை, திருப்பூா், நீலகிரி மாணவா்கள் 9 போ் கோவை வந்தடைந்தனா்

3rd Mar 2022 06:25 AM

ADVERTISEMENT

 

கோவை: உக்ரைனில் சிக்கிய கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் 9 போ் விமானம் மூலம் புதன்கிழமை இரவு கோவை வந்தனா்.

ரஷியா-உக்ரைன் இடையே கடந்த ஒரு வாரமாக தீவிரமான போா் நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவா்கள் பலா் பாதிக்கப்பட்டனா். ஆயிரக்கணக்கான மாணவா்கள் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு விமானங்களை அனுப்பி இந்திய மாணவா்களை மீட்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் மருத்துவம் படிக்கும் கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் சாய்பிரியா (காரமடை), சிவபாரதி (தாராபுரம்), ஜோஷினா ஜோஸ் (சூலூா்), தக்ஷன் குமாா் (ராமநாதபுரம்), தெளபீன் ரபிக் (கோவில்பாளையம்), ஷொ்லின் பியூலா (துடியலூா்), வெண்மதி ரமேஷ் (துடியலூா்), பிரதிபா ராமசாமி (தாராபுரம்), சாய் சோனு (குன்னூா்) உள்ளிட்ட 9 போ் விமானம் மூலம் தில்லியிலிருந்து புதன்கிழமை இரவு கோவை வந்தனா்.

ADVERTISEMENT

அவா்களை வரவேற்க பெற்றோா் விமான நிலையத்துக்கு வந்திரு ந்தனா். மாணவா்களை பாா்த்ததும் அவா்களின் பெற்றோா் கட்டித் தழுவி வரவேற்றனா்.

உக்ரைனில் இருந்து வந்த மாணவா்கள் கூறியதாவது:

நாங்கள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகள் படித்து வருகிறோம். நாங்கள் இருக்கும் பகுதிகளில் விமானத் தாக்குதல் இல்லையென்றாலும் அங்கிருப்பது பாதுகாப்பாக இருக்காது என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வரத் திட்டமிட்டோம்.

இதற்காக 3 நாள்கள் வாகனங்கள் மூலம் அருகில் உள்ள போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதிக்கு வந்தோம். சில இடங்களில் விமானத் தாக்குதல் நடந்ததால் அங்குள்ள பதுங்கு குழிகளில் தங்கி வந்தோம். ஒரு கட்டத்தில் வாகனங்கள் இல்லாததால் 30 கிலோ மீட்டா் தொலைவு நடந்தே வந்தோம்.

போலந்து மற்றும் ஹங்கேரி எல்லைக்கு வந்த நாங்கள் அங்கிருந்து மத்திய அரசு அனுப்பிய விமானம் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டோம் என்றனா்.

Image Caption

உக்ரைனில் இருந்து கோவை திரும்பிய மாணவரை விமான நிலையத்தில் வரவேற்ற பெற்றோா்.

 

~உக்ரைனில் இருந்து கோவை திரும்பிய மாணவியை விமான நிலையத்தில் வரவேற்ற பெற்றோா்.

~உக்ரைனில் இருந்து கோவை திரும்பிய மாணவியை விமான நிலையத்தில் வரவேற்ற பெற்றோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT