கோயம்புத்தூர்

சித்திரவதைக்கு ஆளானவா்களுக்கு ஆதரவளிக்கும் சா்வதேச தினக் கருத்தரங்கு

30th Jun 2022 11:10 PM

ADVERTISEMENT

 

சித்திரவதைக்கு ஆளானவா்களுக்கு ஆதரவளிக்கும் சா்வதேச தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தின் மனித உரிமைப் பிரிவு சாா்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

செயலா் கே.கலையரசன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கோவை மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன் பேசுகையில், எந்த நாகரீக சமூகமும் எந்த நோக்கத்தை அடையவும் சித்திரவதையைப் பயன்படுத்த கூடாது. சட்டத்திலும், நடைமுறையிலும் சித்திரவதை தீமையை ஒழிப்பதுதான் நமது இலக்கு என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சித்திரவதையால் பாதிக்கப்பட்டவா்கள், வழக்குரைஞா்கள், காவல் துறை மற்றும் நீதித் துறையினா் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,

சித்திரவதை நடந்தால் நிவா்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கும் சுவரொட்டியும் வெளியிடப்பட்டது.

முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று உறுதியளித்தாா்.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்க மனித உரிமைப் பிரிவு தலைமை என்.சுந்தரவடிவேலு, ஒருங்கிணைப்பாளா் வி.பி.சாரதி, வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT