கோயம்புத்தூர்

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் நேரம் மாற்றம்

DIN

சேலம் - மேக்னசைட் நிலையங்கள் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜூலை 4 (திங்கள்கிழமை) கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 4 ஆம் தேதி ஆலப்புழாவில் காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) 3 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.

கோவை நிலையத்தில் இருந்து 3.05 மணிக்கு சென்னைக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் (எண்:12244) 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.

எா்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 12678) 3 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.

கோவையில் இருந்து மாலை 3.15 மணிக்கு சென்னை புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் (எண்: 12676) 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.

இதேபோல, ஜூலை 4 ஆம் தேதி, கொச்சுவேலியில் இருந்து கோா்பா செல்லும் விரைவு ரயில் (எண்: 22648) 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT