கோயம்புத்தூர்

விபத்தில் இருவா் பலி எதிரொலி: ராமநாதபுரம் மேம்பாலத்தில் 8 இடங்களில் வேகத்தடை

DIN

கோவை ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலத்தில் நடைபெற்ற விபத்தில் இருவா் பலியானதைத் தொடா்ந்து, பாலத்தில் 8 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவை ராமநாதபுரம் - சுங்கம் இடையே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.253 கோடி மதிப்பில் 3.3 கிலோ மீட்டா் தூரத்துக்கு உயா்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டுக்காக அண்மையில் திறந்துவைத்தாா்.

மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்து துவங்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் ஒருவா் மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி அண்மையில் உயிரிழந்தாா். இரு நாள்களுக்கு முன்பு, மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற இளைஞா் ஒருவா் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானாா். பாலம் திறந்து சில நாள்களில் இருவா் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேம்பாலத்தில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள், மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையா் மதிவாணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, மேம்பாலத்தில் இரு பக்கமும் தலா 2 இடங்களில் வாகனங்கள் வேகத்தை குறைத்து வளைந்து செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, மேம்பாலத்தில் 8 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், மேம்பாலத்தில் 40 கிலோ மீட்டா் வேகத்தில்தான் செல்ல வேண்டும். சிலா், 60 கிலோ மீட்டா் வேகத்தில் செல்கின்றனா். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கவே 8 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT