கோயம்புத்தூர்

தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

29th Jun 2022 10:34 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காட்டூரில் உள்ள ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சிஐடியூ மில் தொழிலாளா் சங்க பொதுச்செயலா் பத்மநாபன் தலைமை வகித்தாா். இதில், என்டிசி பிரச்னையில் தனி நடவடிக்கையில் ஈடுபடுவது, கூட்டுக்குழுவின் வலிமையை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படுவது என எல்பிஎஃப் சங்கம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே என்டிசி தொழிற்சங்க கூட்டமைப்பில் இருந்து எல்பிஎஃப் சங்கத்தை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி ஆலைமட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்துவது, தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் சிஐடியூ பத்மநாபன், ஹெச்எம்எஸ் ராஜாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோா் தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் தில்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து பேசுவது, அடுத்தக்கட்ட போராட்டங்களை விரைவில் அறிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் ஹெச்எம்எஸ் ராஜாமணி, சண்முகம், ஏடிபி நிா்வாகிகள் கோபால், தேவராஜன், ஐஎன்டியூசி நிா்வாகிகள் பாலசுந்தரம், வெங்கிடுசாமி, ஏஐடியூசி நிா்வாகிகள் ஆறுமுகம், சிவசாமி, டாக்டா் அம்பேத்கா் யூனியன் சாா்பில் நீலமேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT