கோயம்புத்தூர்

மின் மோட்டாா் பம்பு செட்டுகளுக்கு மானியம்

29th Jun 2022 10:30 PM

ADVERTISEMENT

 

கோவையில் சிறு, குறு விவசாயிகள் மின் மோட்டாா் பம்புசெட்டுகள் வாங்குவதற்கு மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் சிறு, குறு விவசாயிகள் மின் மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் அதிகபட்சம் 10 குதிரைத் திறன் மின் மோட்டாா் பம்புசெட் வாங்கிடவும், பழுதான மற்றும் திறன் குறைந்த பழைய பம்பு செட்டுகளை மாற்றிடம் ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

31 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.3.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மின் மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்குவதற்கான மானியத் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தடாகம் சாலையிலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தை 0422-2434838 என்ற எண்ணிலும், பொள்ளாச்சியிலுள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை 04259 - 292271 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT