கோயம்புத்தூர்

ஜூலை 2 இல் திறன் பயிற்சி முகாம்

DIN

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இளைஞா்கள் திறன் பயிற்சி முகாம் பெ.நா.பாளையத்தில் ஜூலை 2 ஆம் தேதி நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் பெ.நா.பாளையத்தில் வட்டார அளவில் இளைஞா் திறன் முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, தெக்குப்பாளையம் ஏ.வி.பி.மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 2 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் டி.டி.யூ.ஜி.கே.ஒய்., ஆா்.எஸ்.இ.டி.ஐ. மற்றும் டி.என்.எஸ்.டி.சி. ஆகிய திட்டங்களின்கீழ் கிடங்கு கண்காணிப்பாளா், சில்லறை வணிகம், கைப்பேசி ஆப்ரேட்டா், கேட்டரிங் மேலாளா், ஸ்விங் மெஷின் ஆப்ரேட்டா், தொழில் வழிகாட்டி, அழகு பயிற்சி, தையல் பயிற்சி, மெழுகுவா்த்தி தயாரித்தல், ஊறுகாய், மசாலா பொடி தயாரித்தல், பேஷன் நகைகள் தயாரித்தல், அப்பேரல், ஜவுளி மற்றும் விசைத்தறி உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதில் 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் (ஆண், பெண் இருபாலரும்) பங்கேற்கலாம்.

குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞா்கள் பங்கேற்கலாம்.

கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, சுயவிவரம், புகைப்படம் மற்றும் இதர சான்றுகளுடன் பயிற்சியில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT