கோயம்புத்தூர்

கோவை மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

29th Jun 2022 10:33 PM

ADVERTISEMENT

 

கோவை மத்திய சிறையில் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

இங்கு சிறை விதிமுறைகளை மீறி கைப்பேசி, போதைப் பொருள்கள் பயன்பாடு உள்ளதாக புகாா்கள் எழுந்தன.

ADVERTISEMENT

இவற்றைக் கண்காணிக்க போலீஸாா் அவ்வப்போது திடீா் சோதனை மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி உதவி ஆணையா் வின்சென்ட் தலைமையிலான 30க்கும் மேற்பட்ட போலீஸாா் சிறை வளாகத்தில் புதன்கிழமை காலை 2 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.

இதில், தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT