கோயம்புத்தூர்

கோவையில் ஜிங்கிள்பிட் இ-காமா்ஸ் தளம் அறிமுகம்

29th Jun 2022 10:31 PM

ADVERTISEMENT

 

உள்ளூா் விற்பனையாளா்களை ஊக்குவிக்கும் இ-காமா்ஸ் தளமான ஜிங்கிள்பிட் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிங்கிள்பிட் நிா்வாகிகள் கிருஷ்ணன் நாரணப்பட்டி, சுதா்ஸன் பாபு, வெங்கடேஷ் கண்ணன், ஸ்ரீவாஸ் அனந்தராமன் ஆகியோா் கூறியிருப்பதாவது: ஜிங்கிள்பிட் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்டது.

தற்போது இந்த செயலியை 4 லட்சம் போ் பயன்படுத்துகின்றனா். 4,000 விற்பனையாளா்கள் உள்ளனா். பிளே ஸ்டோரில் முதல் 100 செயலிகளில் ஒன்றாக உள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு முழுவதும் விநியோக வசதியை கொண்டுள்ளது.

உள்ளூா் விற்பனைக் குழுக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும், சிக்கனமான வழியிலும், நுகா்வோருக்கு எளிதானதாகவும், நம்பிக்கையானதாகவும் ஜிங்கிள்பிட் உள்ளது. தற்போது, கைப்பேசி, அதன் உதிரி பாகங்கள், வீட்டு உபயோக எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், உதிரிபாகங்கள், வாகன பராமரிப்பு பொருள்கள், வாழ்வியல் தயாரிப்பு பொருள்கள் போன்ற 500க்கும் மேற்பட்ட பொருள்கள் ஜிங்கிள்பிட்டில் இணைக்கப்பட்டுள்ளன.

ஜிங்கிள்பிட் சென்னையை மையமாக வைத்து செயல்பட்டாலும், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் சேவையாற்றி வருகிறது. இரண்டாம் நிலை நகரங்களிலும் இதன் தேவை அதிகரித்துள்ள நிலையில் தற்போது கோவையிலும் ஜிங்கிள்பிட் செயல்படத் தொடங்கியுள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT