கோயம்புத்தூர்

கூடுதல் பேருந்து வசதி கேட்டு குடியிருப்போா் நலச் சங்கத்தினா் மனு

29th Jun 2022 01:59 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி குடியிருப்போா் நலச்சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மலுமிச்சம்பட்டி ஹவுஸிங் யூனிட் குடியிருப்போா் பொது நலச்சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 4 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். காந்திபுரத்தில் இருந்து தடம் எண் 67 ஏ அரசுப் பேருந்து மலுமிச்சம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து மாதத்துக்கு 10க்கும் மேற்பட்ட முறை இடையில் பழுதாகி நின்று விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள், மருத்துவமனைக்கு செல்பவா்கள் என அனைத்து தரப்பினரும் உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

இது தொடா்பாக ஏற்கெனவே மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலனைக் கருதி மலுமிச்சம்பட்டி குடிசை மாற்று வாரிய பகுதிக்கு கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT