கோயம்புத்தூர்

ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்

29th Jun 2022 01:52 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.62 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கல்பனா, பூமிபூஜை செய்து செவ்வாய்க்கிழமை துவக்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் கல்லாமேடு பகுதியில் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயா் கல்பனா பூமிபூஜை செய்து செவ்வாய்க்கிழமை துவக்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, செல்வபுரம் முத்துசாமி காலனி, எல்.ஐ.சி. காலனி, தில்லை நகா் ஆகிய பகுதிகளில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறுகளுக்கு மோட்டாா் பழுதுபாா்த்தல், குழாய் மாற்றி அமைக்கும் பணியையும், 76ஆவது வாா்டுக்கு உள்பட்ட தெலுங்குபாளையம், சோமு காா்டன், 78ஆவது வாா்டுக்கு உள்பட்ட செல்வபுரம் ஹவுஸிங் யூனிட் பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பில் நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கும் பணியையும் பூமிபூஜை செய்து துவக்கிவைத்தாா்.

முன்னதாக, வடக்கு மண்டலம் 30ஆவது வாா்டுக்கு உள்பட்ட கணபதி அரசுப் பள்ளி அருகே 24 மணி நேர குடிநீா்த் திட்டத்துக்கு குழாய் பதிக்கும் பணியை மேயா் கல்பனா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சிகளில், தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி, நகரமைப்புக் குழுத் தலைவா் சோமு (எ) சந்தோஷ், வாா்டு உறுப்பினா்கள் வசந்தாமணி, ராஜ்குமாா், சிவசக்தி, அப்துல்காதா், உதவி செயற்பொறியாளா் கருப்பசாமி, உதவிப் பொறியாளா் ஏஞ்சலீனா, மண்டல சுகாதார ஆய்வாளா் ராமு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT