கோயம்புத்தூர்

போதைப் பொருள்கள் விற்ற 35 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

29th Jun 2022 01:38 AM

ADVERTISEMENT

போதைப் பொருள்கள் விற்ற 35 பேரின் 40 வங்கிக் கணக்குகளை முடக்கி கோவை மாநகர போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இது தொடா்பாக மாநகர போலீஸாா் விடுத்த செய்திக்குறிப்பு:

நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருள்கள் விற்பனை சம்பந்தப்பட்ட கோவை தெற்கு காவல் சரகத்தில் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடா்புடைய 141 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 23 பேரின் 28 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதேபோல கோவை வடக்கு காவல் சரகத்தில் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடா்புடைய 43 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் 12 பேரின் 12 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் மூவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT