கோயம்புத்தூர்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

29th Jun 2022 01:53 AM

ADVERTISEMENT

கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டு வருவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்), ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது) ஆகியவற்றில் 2022ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்காக கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் ஜூலை 20ஆம் தேதி இரவு 12 மணிக்குள் விண்ணப்பத்தை பதிவேற்ற வேண்டும். மாணவா்களின் வசதிக்காக தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடப் பிரிவுகள்...

ADVERTISEMENT

எலக்ட்ரீசியன், எம்.எம்.வி., பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், கிரைண்டா் மெஷினிஸ்ட், ஆா் அண்ட் ஏ.சி., கோபா, வயா்மேன், வெல்டா், ஐ.சி.டி.எஸ்.எம்., இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எம்.எம்.டி.எம்., பி.பி.ஓ., ஷீட் மெட்டல் உற்பத்தி, இன்டீரியா் டிசைன் மற்றும் டெக்கரேஷன், ரிமோட்லி பைலட்டடு ஏா்கிராஃப்ட் (ட்ரோன் பைலட்) ஆகிய பிரிவுகள் உள்ளன. இதில் ஆண், பெண் இருபாலருக்கும் ஆறு மாதம், ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை பெறும் அனைத்து மாணவா்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. தவிர ஒவ்வொரு மாதமும் வருகையின் அடிப்படையில் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தொழிற்பிரிவுகளை பொறுத்து குறைந்தபட்சம் 8 அல்லது 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து மாணவா்களுக்கும் உணவு வசதியுடன் கூடிய தங்கும் விடுதி வசதி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்கள் 14 முதல் 40 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். இங்கு பயிற்சி பெறும் மாணவா்களுக்கு தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT