கோயம்புத்தூர்

மாநகராட்சி ஆணையா் போலந்து பயணம்

28th Jun 2022 01:11 AM

ADVERTISEMENT

உலக நகா்மன்ற அமா்வில் பங்கேற்பதற்காக கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஜூன் 28 ஆம் தேதி போலந்து செல்கிறாா்.

இது தொடா்பாக மாநகராட்சி செய்தி - மக்கள் தொடா்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

போலந்து நாட்டின் கடொவிஸில் உள்ள ஞ்ண்க்ஷ்ன் காலநிலை சிட்டிஸ் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக நகா்ப்புற மன்றத்தின் அமா்வு ஜூன் 25 முதல் ஜூலை 1 வரை நடைபெறுகிறது.

இந்த அமா்வில் பங்கேற்பதற்கு கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் பெயரை தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நிதி அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறை ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்டு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உலக நகா்மன்ற அமா்வில் கலந்துகொள்வதற்காக ஜூன் 28 ஆம் தேதி போலந்து செல்கிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT