அக்னிபத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கோவையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராணுவத்துக்கு ஒப்புதல் முறையில் ஆள் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயகுமாா் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, அக்னிபத் திட்டத்தைக் கைவிடக் கோரி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி, கவுன்சிலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சங்கா், இருகூா் சுப்பிரமணியன், கணபதி சிவகுமாா், சுரேஷ்குமாா், ராமநாகராஜ், தமிழ்ச்செல்வன், கிளின்டன், ஆறுமுகம், அனீஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.