கோயம்புத்தூர்

பருத்தி செயல்விளக்க திடல் அமைக்க மானியம்:வேளாண்மைத் துறை தகவல்

DIN

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஜூன் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநகரில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து பேச வாா்டு உறுப்பினா்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் செயல்விளக்க திடல் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் அன்னூா், எஸ்.எஸ்.குளம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய வட்டாரங்களில் இறவை பாசனத்திலும், மானாவாரியாகவும் 1,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ரூ.3.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, நீண்ட இழைகள் கொண்ட பருத்தி செயல்விளக்க திடல் 20 ஹெக்டேரிலும், அடா் முறையில் பருத்தி செயல்விளக்க திடல் 10 ஹெக்டேரிலும் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

செயல்விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. புதிய பருத்தி ரகங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த ஊரக நிா்வாகம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பருத்தி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

சுட்டெரிக்கும் வெயில்: தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்

கடையநல்லூரில் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் இரட்டை சிறை தண்டனை

SCROLL FOR NEXT