கோயம்புத்தூர்

ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

26th Jun 2022 12:32 AM

ADVERTISEMENT

 

கோவை, சிங்காநல்லூரில் ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுதாகரன்(38). ஆட்டோ ஓட்டுநா். இவா், நீலிக்கோணாம்பாளையம் அருகே வெள்ளிக்கிழமை நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா், சுதாகரனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.350 பணத்தை பறித்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்து, சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் சுதாகரன் புகாா் அளித்தாா். விசாரணையில், சுதாகரனிடம் பணத்தை பறித்துச் சென்றது நீலிக்கோணாம்பாளையம் தச்சன் தோட்டம், கிழக்கு தெருவைச் சோ்ந்த மோகனசுந்தரம் (23) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT