கோயம்புத்தூர்

கொடிக் கம்பம் நடுவதில் தகராறு: பாரத் சேனா நிா்வாகி கைது

26th Jun 2022 12:32 AM

ADVERTISEMENT

 

கோவை, ரத்தினபுரியில் கொடிக் கம்பம் நடுவதில் ஏற்பட்ட தகராறில் பாரத் சேனா நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரத்தினபுரி கண்ணப்ப நகரில் உள்ள பள்ளிவாசல் அருகே பாரத் சேனா கொடிக் கம்பத்தை சிலா் உரிய அனுமதியின்றி நட்டதாகவும், இதுதொடா்பாக அங்கிருந்த சிலரிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புகாரின்பேரில், அங்கு சென்று போலீஸாா் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக் கம்பத்தை அகற்றினா். இது தொடா்பாக விசாரணை நடத்திய போலீஸாா், உரிய அனுமதியின்றி சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் வகையில் கொடிக் கம்பம் நட்டது பாரத் சேனா அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகளான ரத்தினபுரி கண்ணப்ப நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த வாசு (எ) சீனிவாசன் (42), மற்றும் ஆறுமுகம் உள்பட 3 போ் என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து, பொது அமைதியை சீா்குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து வாசு (எ) சீனிவாசனை போலீஸாா் கைது செய்தனா். மற்ற இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல, அதேபகுதியில் எஸ்டிபிஐ கட்சி கொடிக் கம்பத்தை உரிய அனுமதியின்றி நட்டதாக, அக்கட்சியைச் சோ்ந்த ஜாபா் (42), நாகூா்கனி (37) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT