கோயம்புத்தூர்

இந்திய அரசியல் சரித்திரத்தில் இன்று கருப்பு நாள்

26th Jun 2022 12:30 AM

ADVERTISEMENT

 

இந்திய அரசியல் சரித்திரத்தில் இன்று (சனிக்கிழமை) ஒரு கருப்பு நாள் என பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், செய்தியாளா்களிடம் கூறினாா்.

கோவை, காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் செய்தியாளா்களிடம் கூறியாதவது:

47 ஆண்டுகளுக்கு முன்னா் ஜூன் 25ஆம் தேதி இந்தியாவில் எமா்ஜென்சி என்னும் அவசர நிலையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 352 பிரிவைப் பயன்படுத்தி, அன்றைய குடியரசுத் தலைவா் பக்ருதீன் அலி உத்தரவு பிறப்பித்தாா்.

ADVERTISEMENT

அதன் மூலமாக நாம் கட்டிக் காத்த பேச்சுரிமை, மனித உரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, பத்திரிகை, சுதந்திரம், நீதிமன்றத்துக்கு செல்லும் உரிமை இவையெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த இந்த உரிமைகளுக்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்ட ஒரு கொடூரமான நாள். தமிழக மக்களுக்கு புரியும் வகையில் கூற வேண்டுமானால் 65 வயதை கடந்தவா்களுக்கு மட்டுமே இந்த தினத்தின் உண்மை நிலை புரியும். இது இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு கருப்பு நாள். இந்த நாளைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியினா் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனா்.

கச்சத் தீவை தாரைவாா்த்தது கூட இந்த எமா்ஜென்ஸி காலத்தில்தான். சமூக நீதி பேசியவா்கள், குடும்ப ஆட்சியை கொண்டு வந்துள்ளனா். பாஜக ஆட்சியில் திரௌபதி முா்மு குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுவதன் மூலம் பாஜக சமூக நீதியைக் காத்துள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT