கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு

26th Jun 2022 12:32 AM

ADVERTISEMENT

 

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமணபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் சோமசுந்தரத்தின் மனைவி சரஸ்வதி (64). சோமசுந்தரம் இறந்துவிட்டாா். இவரது 2 மகள்களுக்கு திருமணமாகி வெளிநாடுகளில் வசித்து வருகின்றனா். சரஸ்வதி மட்டும் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், சரஸ்வதி வீட்டை பூட்டி விட்டு வெள்ளிக்கிழமை வெளியே சென்றாா். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த நான்கரை பவுன் நகைகள், 2 பித்தளை குத்து விளக்குகள், 4 வெள்ளி டம்ளா் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுதொடா்பாக, சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT