கோயம்புத்தூர்

வன விலங்குகளுக்கு குடிநீா்த் தொட்டிகளை அதிகப்படுத்த வலியுறுத்தல்

DIN

வன விலங்குகள் தண்ணீா் குடிக்க வசதியாக வனப் பகுதிகளையொட்டி குடிநீா்த் தொட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிச்சாமி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் மழைக் காலம் துவங்குவதற்கு முன் குளங்களில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். கடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், மாவட்டம் முழுக்க மண் எடுக்க வேண்டிய இடங்கள் குறித்து பட்டியல் கொடுத்தும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.

விவசாயிகள் அல்லாதவா்கள் விதிகளை மீறி வண்டல் மண் எடுப்பதைத் தடுத்து, விவசாயிகள் முறையாக எடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நீா் ஆதாரங்களைத் தூா்வார வேண்டும். மாவட்டத்தில் பயன்படுத்த முடியாத, அனுமதி இல்லாத கல் குவாரிகளில் மழை நீா் சேகரிக்கும் திட்டம் துவங்க முதல்வா் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். அதன்படி, கனிமவளத் துறை சாா்பில், மாவட்டத்தில் உள்ள பயன்படுத்தாத கல் குவாரிகள், தனியாா் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆய்வு செய்து மழைக் காலங்களில் உருவாகும் மழை நீரைச் சேகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

வன விலங்குகள், விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் நுழைவதைத் தடுக்க வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குடிநீா்த் தொட்டிகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் வனப் பரப்பில் உள்ள தனியாா் கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்தடி நீா் உயா்த்த நடவடிக்கை, பாலம் கட்டுதல், சாலைகளை சீரமைத்தல், தொழில்சாலைக் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்டவை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT