கோயம்புத்தூர்

100 அடியை எட்டியது சோலையாறு அணை

25th Jun 2022 01:03 AM

ADVERTISEMENT

வால்பாறையில் பெய்து வரும் தொடா் மழைக் காரணமாக சோலையாறு அணை 100 அடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. அதே சமயம் அணைகளின் நீா்வரத்தும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் சோலையாறு அணைக்கு விநாடிக்கு 543.06 கன அடி நீா்வரத்தாக உள்ளது.

164 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் 100.10 அடியாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT