கோயம்புத்தூர்

‘பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்’

25th Jun 2022 01:03 AM

ADVERTISEMENT

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் பெற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசு பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதரமான பணிகள் ஆற்றியவா்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் தொடா்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, செப்டம்பா் 15 ஆம் தேதிக்குள் அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT