கோயம்புத்தூர்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் 56 கிராமங்கள் தோ்வு

25th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 56 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கிராம ஊராட்சிகளில் குறைந்தபட்சம் 15 ஏக்கா் தரிசு நிலம் மற்றும் குறைந்தபட்சம் 8 விவசாயிகள் அடங்கிய தொகுப்புகள் அமைக்க வேண்டும்.

அதன்படி அன்னூா் வட்டாரத்தில் ஆம்போதி, அ.செங்கம்பள்ளி, வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நாயக்கன்பாளையம், பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரத்தில் புரவிபாளையம் ஆகிய 5 கிராமங்களில் 5 தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு குழுக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்துக்கு 460 ஹெக்டோ் பரப்புக்கு பசுந்தாள் உரப்பயிா் விதைகள் 23 மெட்ரிக் டன் விநியோக இலக்காகப் பெறப்பட்டுள்ளது.

நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு பொருள் இலக்காக 1,300 ஹெக்டோ் மற்றும் நிதி இலக்காக ரூ.1,496.37 லட்சம் பெறப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையின் சாா்பில் தோட்டக்கலைப் பயிா்களான பழங்கள் மற்றும் காய்கறிகளை நடப்பு ஆண்டில் பரப்பு விரிவாக்கம் செய்யும் பொருட்டு மொத்த இலக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 725 ஹெக்டோ் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் 2022- 2023 ஆம் ஆண்டுக்கு 3,253 ஹெக்டோ் பொருள் இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 56 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 470 ஹெக்டோ் பொருள் இலக்காகவும், ரூ.115.63 லட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் துல்லிய பண்ணையத் திட்டம், ஊடுபயிா் சாகுபடியை ஊக்குவித்தல், உயா் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்தல், ஹைட்ரோபோனிக்கஸ், செங்குத்துத் தோட்டத்தளைகள், உழவா் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி பயிா் சாகுபடி ஊக்குவிக்க பயிா் ஊக்கத் தொகை, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்க தளைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT