கோயம்புத்தூர்

அக்ரோநோவா 2022:வேளாண் பல்கலைக்கழகத்தில் ஜூலை 4, 5 இல் நடக்கிறது

25th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் அக்ரோநோவா 2022 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாகவும், வேளாண்மை பற்றிய புரிதலைக் கொடுக்கும் நிகழ்ச்சியாகவும் இது நடைபெற உள்ளது.

இதில் பள்ளி மாணவா்களுக்காக விநாடி - வினா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கிறுக்கல்கள், வாா்த்தை விளையாட்டு போன்ற போட்டிகளும், கல்லூரி மாணவா்களுக்காக விநாடி - வினா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, புதையல் வேட்டை, களி மண்ணில் கைவினைப் பொருள்கள் செய்வது, பானை ஓவியம், மீம்ஸ் தயாரிப்பது போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் இணையதள் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், காட்சிப்படுத்தப்படும் வேளாண்மை தொடா்பான மாதிரிகள், புதுமைகள் தொடா்பான புகைப்படங்களை பொதுமக்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வேளாண்மை முதன்மையா் நா.வெங்கடேச பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT