கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அனிமேஷன், டேட்டா அனலிடிக்ஸ் படிக்க விண்ணப்பிக்கலாம்

25th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அனிமேஷன், டேட்டா அனலிடிக்ஸ் படிக்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு இளநிலை தொழிற்பாடங்களான பிசினஸ் பிராசஸ் & டேட்டா அனலிடிக்ஸ், மல்டிமீடியா & அனிமேஷன் ஆகிய படிப்புகளைப் படிக்க 12 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்பு மாணவா் சோ்க்கை 2022-2023 என்ற இணைய முகப்பின் வழியாக தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த இரண்டு படிப்புகளும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.

மேலும் இது மத்திய திறன் மேம்பாட்டு மையத்தினால் அங்கீகரிக்கப்பட்டு பாரதியாா் பல்கலைக்கழகத்தினால் பட்டம் அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இப்படிப்பில் சேரும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.

மேலும் ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் ஒரு மாணவருக்கு தகுதியின் அடிப்படையில் இலவச படிப்பு வழங்கப்படும் என்றும், இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைக் காணலாம் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT