பேங்க் ஆஃப் இந்தியா கிளைகளில் கடன்தாரா்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ரூ.5 கோடி வரை கடன் நிலுவை வைத்துள்ள வேளாண், சிறு தொழில், சில்லறை வணிகம், தனிநபா் கடன்தாரா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்களது வாடிக்கையாளா்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வாராக் கடனை முடித்துக் கொள்ளும்படி பேங்க் ஆஃப் இந்தியாவின் கோவை மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.