கோயம்புத்தூர்

ஈஷா சாா்பில் சிறைக் கைதிகளுக்குசிறப்பு யோகா வகுப்பு

15th Jun 2022 11:09 PM

ADVERTISEMENT

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஈஷா யோக மையம் சாா்பில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வாடும் சிறைக் கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க ஈஷா சாா்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 3 நாள் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மத்திய சிறைகள், மகளிா் சிறை, மாவட்ட சிறைகள் என மொத்தம் 26 சிறைகளில் மே 30 முதல் ஜூன் 18ஆம் தேதி வரை இந்த முகாம் நடத்தப்படுகிறது.

உயிா் நோக்கம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த யோகா வகுப்பில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற எளிமையான, அதேநேரம் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், சிறை வாா்டன்களும் பங்கேற்றுள்ளனா்.

இந்தப் பயிற்சியை சிறைக் கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்த பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும் அவா்களின் முதுகுத்தண்டு வலுப்பெறும். மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT