கோயம்புத்தூர்

ஜி ஸ்கொயா் நிறுவனத்துக்கு 8 நாள்களில் திட்ட அனுமதி கொடுத்ததாக கூறுவதில் உண்மையில்லைரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்தேசியத் தலைவா் பேட்டி

15th Jun 2022 11:06 PM

ADVERTISEMENT

கோவையில் ஜி ஸ்கொயா் நிறுவனத்துக்கு 8 நாள்களில் திட்ட அனுமதி வழங்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியிருப்பதில் உண்மை இல்லை என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவா் ஆ.ஹென்றி தெரிவித்துள்ளாா்.

கோவைக்கு புதன்கிழமை வந்த ஆ.ஹென்றி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக நசுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் துறை எழுச்சி பெறுவதற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமென்ட் மீதான ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஜி ஸ்கொயா் நிறுவனம் பற்றி முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளாமல் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கருத்து தெரிவித்து வருகிறாா். கோவையில் அந்த நிறுவனத்துக்கான இடத்துக்கு 8 நாள்களில் திட்ட அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை.

ADVERTISEMENT

கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கும் இடத்தில் கூட சில குறைபாடுகள் இருப்பதாக டிடிசிபி சுட்டிக் காட்டும் அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT