கோயம்புத்தூர்

நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக முகநூல் பதிவு: கோவை இளைஞர் கைது

15th Jun 2022 03:37 PM

ADVERTISEMENT

கோவை: நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக முகநூல் பதிவிட்ட கோவையை சேர்ந்த ஏ.பி.வி.பி  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட நூபுர் சர்மாவை கைது செய்ய கோரி பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது உத்தர பிரதேச மாநிலத்திலும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: திருச்சி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இந்நிலையில் கோவை சென்னனூரை  சேர்ந்த  ஏ.பி.வி.பி நிர்வாகியும், பாஜக ஆதரவாளருமான கார்த்திக் (26) என்ற இளைஞர், தனது முகநூலில் நுபுர் சர்மாவை ஆதரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT