கோயம்புத்தூர்

புதிய மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க இரும்புத் தடுப்புகள் அமைப்பு

15th Jun 2022 12:46 AM

ADVERTISEMENT

திருச்சி சாலை ராமநாதபுரத்தில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தில் விபத்துகளைத் தடுக்க இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி சாலை ராமநாதபுரத்தில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்மையில் திறக்கப்பட்டது. இந்நிலையில், மேம்பாலத்தில் சென்ற பிரசாத் (28) என்ற இளைஞா் வேகமாகச் சென்றதால் பாலத்தின் வளைவுகளில் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி அண்மையில் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து மேம்பாலத்தில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக மேம்பாலத்தின் மீதுள்ள வளைவுகளில் இரும்புத் தடுப்புகளை போக்குவரத்து போலீஸாா் ஏற்படுத்தியுள்ளனா். அதே நேரத்தில் பொதுமக்களும் மேம்பாலத்தில் செல்லும்போது விதிக்கப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT