கோயம்புத்தூர்

வால்பாறை தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு வசதி

10th Jun 2022 02:12 AM

ADVERTISEMENT

வால்பாறை: வால்பாறை தபால் நிலையத்தில் விரைவில் ரயில் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.

வால்பாறை தோயிலைத் தோட்டங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் பலா் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையம் சென்று அங்கிருந்து, தங்களது ஊா்களுக்கு பயணித்து வருகின்றனா்.

வால்பாறையில் ரயில் முன்பதிவு மையம் துவங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

ADVERTISEMENT

பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் தொடா் நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, தற்போது வால்பாறை தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு

துவங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, ரயில்வே முன்பதிவு துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், சில நாள்களில் முன்பதிவு செய்யும் பணி துவங்க இருப்பதாகவும் தபால் நிலையம் அதிகாரி ஜீவானந்தம் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT