கோயம்புத்தூர்

அமிா்தவனம் திட்டம் தொடக்கம்

10th Jun 2022 02:27 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை அமிா்தா விஸ்வ வித்யாபீடத்தில் மழைக் காடுகளை உருவாக்கும் நோக்கில் அமிா்தவனம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அமிா்தா பல்கலைக்கழக வளாகத்தில் குறுகிய பரப்பளவில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும், அமிா்தவனம் திட்டம் தொடங்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலா் டி.கே.அசோக்குமாா் மரக்கன்றை நட்டு இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.விழாவில் 300 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

ADVERTISEMENT

சுவாமி அமிா்தகிருபானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமிா்தாவின் நிா்வாகிகளான கே.சங்கரன், பேராசிரியா் சி.பரமேஸ்வரன், சசாங்கன் ராமநாதன், சதீஷ் மேனன், பி.வேணுகோபால், எஸ்.மகாதேவன், உதயசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT