கோயம்புத்தூர்

லாட்டரி விற்பனை: 34 போ் கைது

10th Jun 2022 02:22 AM

ADVERTISEMENT

கோவை: கோவையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.1.41 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக கோவை மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு புதன், வியாழக்கிழமை ஆகிய இரு நாள்கள் கோவை மாவட்ட போலீஸாரால் சோதனை நடத்தப்பட்டது.

இதில், 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 1, 601 லாட்டரி சீட்டுகளும், ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 900மும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்து புகாா் அளிக்க 94981-81212, 77081-00100 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT