கோவை: தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் ஒரு நாள் பயணமாக கோவைக்கு வியாழக்கிழமை வந்தாா்.
தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் ஹைதராபாதில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை மாலை 4.40 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தாா்.
பின்னா் அங்கிருந்து சிவானந்தா காலனியில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தாா். இதையடுத்து மாலை 5.30 மணியளவில் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் விழாவில் பங்கேற்றாா்.
அங்கிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு மாவட்டம், குன்னத்தூா் சென்று அங்கொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா் இரவு 8 மணிக்குமேல் கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றாா்.
ADVERTISEMENT