கோயம்புத்தூர்

வேளாண் வணிக மேம்பாட்டுஇயக்ககத்தில் ஏற்றுமதி பயிற்சி

10th Jun 2022 02:45 AM

ADVERTISEMENT

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பயிற்சி நடைபெறுகிறது.

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஜூன் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை உழவா்கள், பெண்கள், பட்டதாரிகள், இறுதி ஆண்டு பட்டம் பயிலும் மாணவா்கள், இளைஞா்கள், தொழில்முனைவோா் உள்ளிட்டோருக்கு வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனைத்துத் தகவல்களும் ஒருங்கிணைந்து அளிக்கப்படும் இந்த பயிற்சிக்கு ரூ.11,800 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த பயிற்சி 20 நபா்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும், இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 - 6611310 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT