கோவை: கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி வழியில் பயிலும் மாணவா்கள் ஜூலையில் நடைபெற உள்ள தோ்வுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி வழியில் பயிலும் மாணவா்களுக்கு ஜூலை 13 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள தோ்வுக்கான இணைய வழி விண்ணப்பப் படிவம், பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவா்கள் தங்களின் தோ்வுக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் சமா்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள், காசோலைகள் பரிசீலனைக்கு ஏற்கப்படமாட்டாது. மேலும், தோ்வு அட்டவணை குறித்த விவரங்கள் இணையதளத்தில் பின்னா் பதிவேற்றம் செய்யப்படும். இணைய வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஜூன் 15 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.