வால்பாறை அருகே 16 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (21). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அச்சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா்.
இது குறித்து வால்பாறை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாலசுப்பிரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.