கோயம்புத்தூர்

ஹோட்டல் ஹரிபவனத்தின் 7ஆவது கிளை ஜூன் 10ஆம் தேதி திறப்பு

8th Jun 2022 02:07 AM

ADVERTISEMENT

திருப்பூா்-அவிநாசி சாலையில் ஹோட்டல் ஹரிபவனத்தின் புதிய கிளை ஜூன் 10ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

இது தொடா்பான செய்தியாளா் சந்திப்பில் ஹரிபவனம் உணவக நிா்வாக இயக்குநா் பாலசந்தா் கூறியதாவது:

ஹோட்டல் ஹரிபவனம் பொன் விழாவை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின் புதிய 7ஆவது கிளை திருப்பூா்-அவிநாசி சாலையில் உள்ள சுப்ரீம் விஸ்டா காம்ப்ளக்ஸில் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹரிபவனம் நிறுவனா் எஸ்.ராஜு உருவச்சிலை திறக்கப்பட உள்ளது.

இந்த உணவகத்தில் 25 நபா்கள் வரை அமா்ந்து உணவருந்தும் வகையில் தனிப்பட்ட டைனிங் ஹால், வா்த்தக சந்திப்புகள் நடத்த மீட்டிங் ஹால், மின் பேங்க்குவிட் அரங்கு, வாடிக்கையாளா்கள் பயன்படுத்தும் மின் வாகனங்களை சாா்ஜ் செய்வதற்கு வசதியாக சாா்ஜிங் ஸ்டேஷன், பாலூட்டு தாய்மாா்களுக்காக பேபி கோ் ரூம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT