ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் 35 ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் 35 ஆவது ஆண்டு விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி விழாவுக்குத் தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் ஆண்டறிக்கை வாசித்தாா்.
விழாவில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், காவல் ஆணையத்தின் உறுப்பினருமான கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து கல்லூரி சாா்பில் அவருக்கு உலக அமைதி தூதுவா் என்ற விருது வழங்கப்பட்டது.
விழாவில், பாரதியாா் பல்கலைக்கழக அண்ணா ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் எம்.பத்மநாபன், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படையில் சாதனை படைத்தவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.