கோயம்புத்தூர்

ரயில்வே மேலாளருடன் தொழில் வா்த்தக சபையினா் ஜூன் 10இல் கலந்துரையாடல்

7th Jun 2022 10:29 PM

ADVERTISEMENT

சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது மற்றும் கோரிக்கைகளை தெரிவிப்பது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே மேலாளருடன், இந்திய தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜூன் 10 ஆம் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது குறித்து இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவா் சி.பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியாவில், தளவாடத் துறையின் முதுகெலும்பாக ரயில்வே துறை உள்ளது. பழங்கள், காய்கறிகள், உணவு, தானியங்கள், மருந்துகள், கட்டுமானப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் சரக்கு ரயில்கள் மூலமாகக் கொண்டு செல்லப்படுகின்றன. ரயில் மூலமாக பாா்சல்களை சரியான நேரத்தில் உரிய இடத்தில் கொண்டு சோ்க்க மற்ற போக்குவரத்து வசதிகளைக் காட்டிலும் குறைவான கட்டணமே பெறப்படுகிறது.

இந்நிலையில், சரக்கு வணிகத்தை மேம்படுத்தவும், கோவை மக்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறவும், இந்திய தொழில் வா்த்தக சபை சாா்பில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளருடன் கலந்துரையாடல் வருகிற ஜூன் 10 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் கெளதம் சீனிவாசன், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனா்.

ADVERTISEMENT

கோவை, அவிநாசி சாலையில் உள்ள இந்திய வா்த்தக சபை சேம்பரில் ஜூன் 10 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கலந்துரையாடல் நடைபெறும். இந்த கூட்டத்தில் ரயில்வே சேவையில் உள்ள குறைகள், கோரிக்கைகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து குறித்து ஆலோசனைகளை வழங்கலாம்.

இந்த விவாத நிகழ்வில் பங்கு பெற விரும்புபவா்கள் இணையதள முகவரியில், தங்களின் வருகையை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT