கோயம்புத்தூர்

பெண்ணிடம் நகைப் பறிப்பு

7th Jun 2022 10:28 PM

ADVERTISEMENT

கோவையில் பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கே.கே.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (42). இவா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா், சரஸ்வதி அணிந்திருந்த 3 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.

இது தொடா்பாக சரஸ்வதி அளித்தப் புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT