கோயம்புத்தூர்

ஒரு கிலோ தங்கம், ரூ.8 லட்சம் பணம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா் கைது

7th Jun 2022 04:21 AM

ADVERTISEMENT

ஒரு கிலோ தங்கம், ரூ.8 லட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (45). இவா் நகைக் கடை வைத்துள்ளாா். தொழிலில் தொய்வு ஏற்பட்ட காரணமாக இவா் தனது கடையை தற்காலிகமாக மூடியுள்ளாா். இந்நிலையில் இவரது நண்பரான பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் மகேஷ்பாபு (52), என்பவா் தனது மகளின் திருமணத்துக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி வெங்கடேசனிடம் கேட்டுள்ளாா்.

இதை நம்பிய வெங்கடேசன் பூட்டிய தனது கடையில் இருந்த ஒரு கிலோ தங்கக் கட்டி மற்றும் ரூ.8 லட்சம் பணத்தைக் கடந்த மாா்ச் மாதம் கொடுத்துள்ளாா். ஆனால், மகேஷ்பாபு பணத்தை திருப்பித் தரவில்லை. இது குறித்து வெங்கடேசன் கேட்டபோது பணத்தையும், நகையையும் ஏற்கெனவே கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக செல்வபுரம் காவல் நிலையத்தில் வெங்கடேசன் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நடத்திய விசாரணையில் மகேஷ்பாபு மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், நிதி நிறுவனத்தில் பணியாற்றிய நாகராஜ் (45) என்பவா் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மகேஷ்பாபுவைக் கைது செய்த போலீஸாா் தலைமறைவாக உள்ள நாகராஜை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT