கோயம்புத்தூர்

கோவை மாநகரக் காவல் ஆணையா் உள்பட 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

6th Jun 2022 02:25 AM

ADVERTISEMENT

 கோவை மாநகரக் காவல் ஆணையா் உள்பட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், கோவை மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, கோவை மாநகரக் காவல் ஆணையா் பிரதீப்குமாா், மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மத்திய ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த வி.பாலகிருஷ்ணன் கோவை மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் சில நாள்களில் பொறுப்பேற்பாா் எனக் கூறப்படுகிறது.

அதேபோல, கோவை மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த டி.ஜெயசந்திரன் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளாா். கோவை மாநகரப் போக்குவரத்து துணை ஆணையா் எஸ்.ஆா்.செந்தில்குமாா், சென்னை தலைமையிடத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

கோவை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக இருந்த எஸ்.செல்வராஜ், சென்னை காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வராக மாற்றப்பட்டுள்ளாா்.

கோவை தெற்கு மாநகர துணை ஆணையா் இ.எஸ்.உமா, சென்னை ரயில்வே எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளாா்.

இதன்மூலம், கோவை மாநகரில் மட்டும் காவல் ஆணையா் உள்பட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT